Sunday 10 December 2023

SKIM


மனிதம் கலாலயம் அன்பர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள் வணக்கங்கள்.இன்று உலக ஆசிரியர்கள் தினம்.சமத்துவ சிந்தனையை முதன் முதலாக தமிழகத்தில் விதைத்து வளர்த்தெடுத்த சுத்த சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய வடலூர் வள்ளலார் பிறந்த நன்னாள்.சிதம்பரம் அரசு நந்தனார் கல்வி நிறுவனங்களின் தோற்றுநர் தவத்திரு சாமி சகஜானந்தா அடிகளார், 1890 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் ஆரணி மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் அண்ணாமலை அலர்மேலு என்னும் பழந்தமிழர் விவசாயக் குடியில் பிறந்தார்.இளமை முதல் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு தனது 17 ஆம் வயதில் சென்னை வியாசர்பாடி அமைந்திருந்த கரப்பாத்திர சாமி என்னும் சிவப்பிரகாச சாமிகளின் ஞானஒளியில் வளர்ந்து, தவத்திரு சகஜானந்தா என்னும் பெயர் சூட்டப்பட்டு,தன் குருவின் வழிகாட்டுதலுடன், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பணியாற்றும்குறிக்கோளுடன் 1910 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிதம்பரம் வந்தடைந்தார் .தில்லை நடராஜர் தரிசனத்தை முடித்துக் கொண்டு நந்தன் தீயில் நடந்து சென்றதாய் சொல்லப்படும் நிகழ்வு நடந்த ஓம குளத்தை வந்து அடைந்தார். ஓமக்குளத்தின் தென்கரையில் ஓலை குடிசை அமைத்து வள்ளலார் தொண்டர்கள் பின்னத்தூர் ஸ்ரீலஸ்ரீ லட்சுமணன் அவர்களும் அரசூர் ஆறுமுகம் சாமிகளும் நந்தனார் மடம் என்னும் ஒரு அமைப்பை நடத்திக் கொண்டிருப்பதை காணும் வாய்ப்பினை பெற்றார்.வள்ளலார் தொண்டர் ஆகிய ஸ்ரீலஸ்ரீ லட்சுமணன் அவர்கள் தவத்திரு சாமி சகஜானந்தா அடிகளாரின் கல்விப் பணி தொடங்குவதற்கு பொருளாதாரத்திலும் உடல் உழைப்பாலும் பெரிதும் உதவியாக இருந்தார்.இன்று அக்டோபர் ஐந்தாம் நாள் சுத்த சமரச சன்மார்க்க சங்கத்தை உருவாக்கிய வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்தநாள். இந்த நன்னாளிலே அணையா அடுப்பை மூட்டி இன்று வரை கோடான கோடி மக்களுக்கு உணவு அளித்து வரும் வள்ளலாரை வணங்கி, அவர் பாதையிலேயே பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவொளி வழங்கி அன்னமும் வழங்கி வரும் தவத்திரு சாமி சகஜாநந்தா அடிகளாரை வணங்கி மகிழ்வோம்.நம்மால் இயன்ற சிறு உதவிகளை ஏழை எளிய உழைக்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு வழங்கி அடிகளாரின் மெய்ஞான வழிபாட்டினைத் தொடர்வோம் .வாழ்க தமிழ் வளர்க கலைகள் ஓங்குக மனித நேயம்.

Thursday 16 February 2023

புதிய கும்மி

இயற்றியவர் - கலையாசிரியர் 
சிதம்பரம் பாபு.A.K

     

கும்மியடி பெண்ணே கும்மியடி - ஒன்று

கூடி மகிழ்ந்தே      

கும்மியடி.              

குட்டக்குட்ட சிறு 

பிள்ளைகள்  போலவே 

குனிந்தவர் நிமிர்ந்திடக் கும்மியடி.                                             

செம்மொழி நம் மொழி 

செந்தமிழ் தேன்மொழி 

சந்தங்கள் பாடியே கும்மியடி!               

பொம்மையல்ல நாங்கள்

புதிய உலகின் 

புரட்சிப் பெண்    

 என்றே கும்மியடி.


மெல்ல மெல்ல இனி        

மேல் என்றும் கீழ் என்றும் சொல்பவர் மாறிடக் கும்மியடி                        

சொல்ல சொல்ல அவர் 

மாறவில்லை என்றால்    

சூழ்ந்து முகத்திலே கும்மியடி,                   


சாத்வீக மாதவர்                           சகஜாநந்தாவின் 

சாதனைகள் சொல்லி கும்மியடி!   - 

அவர்   

சேர்த்தப் பெரும்செல்வம் செந்தமிழ்ப் புலமை    

தந்ததே என்று நீ 

கும்மியடி!      

அண்ணல் நம்அம்பேத்கர் 

அறவுரை ஏற்றவர்

தொண்டுகளைப் போற்றி கும்மியடி! 

தந்தை பெரியாரின் 

சிந்தனை புரிந்து                 

தன் மானம் காத்திட கும்மியடி!                                      


அரவம் என்றால் ஓசை 

அரவாணன் இராவணன் -

அவன் தந்த இசையோடு கும்மியடி!  - அவர்

 பருக மறுத்திட்டார்                

சுரபானம் அதனாலே   

அசுரன் என்றாரெனக் கும்மியடி!                      


கும்மியடித் தம்பிக் 

கும்மியடி  -   நம் 

அன்னையர் மகிழ்ந்திட கும்மியடி!                        பெண்ணுரிமைக் காக்கும் 

சிந்தனை மேலோங்க       

 அன்புடன் சேர்ந்து நீ கும்மியடி!                        


பெண்ணென்றும் ஆணென்றும் பேதமைக் கொள்ளாமல் 

ஒன்றாகக் கூடியே கும்மியடி!

ஆண் எனும் ஆணவ 

நோய்கொண்ட மூர்க்கரின்  

ஆழ்மனம்  ஒளிபெறக் கும்மியடி!                                                              

ஆலயமணியோசை

இயற்றியவர் - கலையாசிரியர் 

சிதம்பரம் பாபு.A.K


ஆலயமணி ஓசை கேட்கின்றது - மெய் அன்பர்கள் நெஞ்சத்தை ஈர்க்கின்றது        

  

வாவென்று அழைத்தொன்றாய் சேர்க்கின்றது    

வாழ்வினில் ஆனந்தம் பூக்கின்றது. (ஆலய)      


பள்ளிவாசல் பாங்கோசை பணிகளை நினைவூட்டும்  மாதா கோயில் மணி ஓசை மனதிற்குத் தெம்பூட்டும் 


வள்ளல் கோயில் மணி ஓசை… - வடலூர்       வள்ளல்கோயில் மணிஓசை சன்மார்க்க நெறியூட்டும்.   பள்ளிக்கூட மணி ஓசை - பகுத்தறிவை யூட்டும்.      


               (ஆலய மணியோசை

   

சகஜாநந்தா மெய்யன்பர்கள் வழிபாடு

கலையாசிரியர் 
சிதம்பரம் பாபு.அ.கனகய்யா